/tamil-ie/media/media_files/uploads/2023/07/jcb.jpg)
அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் சார்பில் கால்வாய் வெட்டும் பணிக்காக பல ஏக்கர் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் சார்பில் கால்வாய் வெட்டும் பணிக்காக பல ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், கூறுகையில் “ மக்களுக்கு எதிராக செயல்பட்டு நெற்பயிர்களை அழிக்கும் திமுக அரசை, விவசாயிகள் மன்னிக்கமாட்டார்கள். மக்கள் உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய அரசு, எல்.எல்.சி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது” என்று கூறியுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, நெற்பயிர்களை அழிக்க வேண்டும் என்ற தமிழக அரசு முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்,” விவசாயிகள் இழப்பிற்கு சரியான இழப்பீடு தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, விவசாயிகளின் நியாயமான தேவைகளை என்.எல்.சி நிறுவனம் பூர்த்தி செய்யம்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
டிடிவி தினகரன் “ விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, வளர்ந்திருக்கும் நெற்பயிர்களை ஏன் சேதப்படுத்த வேண்டும்” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.