நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக வீடு, நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் சங்கம் சார்பில் என்.எல்.சி ஆர்ச் கேட் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி இந்திய நிறுவனத்தில் என்எல்சி அதிகாரிகள் , ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். என்.எல்.சி நிறுவனம் தனது இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்க பணியை கம்மாபுரம் அடுத்த கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி, மும்மடி சோழகன், சாத்தப்பாடி, உ.ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் வீடு மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வீடு, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட கிராம மக்களுக்கு என்.எல்.சி நிறுவனம் சார்பாக மாற்றுமனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், என்.எல்.சி நிறுவனத்தால் வழங்கப்படும் மாற்று இடத்தில் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதால் விவசாயம் செய்யும் சூழலில் தங்களுக்கு மாற்று இடங்களை வழங்க வேண்டும் எனவும். என்.எல்.சி நிறுவனத்தால் குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டு மனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
குறிப்பாக போக்குவரத்து, தண்ணீர் வசதி, மருத்துவம், கல்விக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ள இடத்தில் மாற்று மணை வழங்க வேண்டும். மேலும், விவசாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு R&R பாலிசியை அமல்படுத்தி மாற்றுமனை இழப்பீடு உள்ளிட்டவை வழங்க வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“