Advertisment

துணைவேந்தர் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை; ஆளுநர் ரவி போட்ட உத்தரவு

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கத் தேர்வுக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்ததற்கு ஆளுநர் ஆர்.என் ரவி எதிர்ப்பு. மேலும் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிக்கையையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்ததல்

author-image
WebDesk
Sep 27, 2023 08:47 IST
New Update
Governor RN Ravi sent a reply to Raghupathis letter

துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்கத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர் அமைத்த சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெற்றிருந்த யு.ஜி.சி உறுப்பினரை தவிர்த்துவிட்டு புதிதாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அறிவிக்கைக்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்து அரசாணையையும் திரும்ப பெற வலியுறுத்தியுள்ளார். 

Advertisment

இதுகுறித்து ஆளுநர் மாளிகை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை பரிந்துரை செய்வதற்கான தேடல் குழுவை அமைத்து தமிழக ஆளுநரும், மாநிலப் பல்கலை.களின் வேந்தருமான ஆர்.என்.ரவி கடந்த செப். 6-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டார். அந்த தகவல் ஆளுநர் மாளிகையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டு, செய்திக்குறிப்பு மூலம் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. 

இந்தச்சூழலில் விதிகளுக்கு புறம்பாக சென்னை பல்கலை. துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெற்றிருந்த யு.ஜி.சி உறுப்பினரை தவிர்த்துவிட்டு உயர்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அறிவிக்கையானது செப்.13-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த அறிவிக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைபிடிக்காமல் அதை மீறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுபல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானதாகும்.

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கும் சூழலில், அவரின் ஒப்புதல் பெறாமல் பல்கலைக்கழக விவகாரங்களில் செயல்படுவதற்கு உயர்கல்வித் துறை செயலருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Governor Rn Ravi #Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment