தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!

தேர்தலை நடத்திவிட்டு மே 3-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்படும்  கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி உயர்நீதிமன்ற கிளையில்  வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற  கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  மேலும், தேர்தல் நடவடிக்கைகளில் உயர்நீதிமன்றம் தலையிட்டு தடை விதிக்க முடியாது என்று, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் நேற்றைய திஅன்ம் (20.4.18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

னால் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்தலை நடத்திவிட்டு மே 3-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

×Close
×Close