நிவாரணம் வழங்க தடையில்லை; மாவட்ட நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும் - தமிழக அரசு பதில்
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதற்கு ஒட்டுமொத்தமாக தடை ஏதும் விதிக்கப்படவில்லை எனவும், நிவாரண உதவிகள் வழங்க விரும்புவோர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus lock down, chennai high court, tamil nadu news, நிவாரணப் பொருட்கள் வழங்க தடையில்லை, சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு, latest tamil nadu news, no ban to corona virus relief distribute, tamil nadu government, lates coronavirus news, chennai high court news
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதற்கு ஒட்டுமொத்தமாக தடை ஏதும் விதிக்கப்படவில்லை எனவும், நிவாரண உதவிகள் வழங்க விரும்புவோர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், சமூக விலகலை பின்பற்றவும் மட்டும் தான் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், தற்போது மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், இந்த உத்தரவுகளை மீறுவது, அரசு நடவடிக்கைகளுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அரசு பதில்மனுவில் சுட்டிக் காட்டியுள்ளது.
நிவாரண உதவிகளை வழங்க தடை விதித்துள்ளதாகக் கூறி, அரசு நடவடிக்கைகளை குறுகிய நோக்கத்துடன் பார்க்கக் கூடாது எனவும், அரசியல் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தனது பதில்மனுவில் தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”