‘தலைவி’ ‘குயின்’ படங்களுக்கு தடை கோரிய ஜெ.தீபா வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடரும் வெளியாக தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், தடை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Queen, A.L.Vijay, Kangana Ranaut, Thalaivi, Ramya Krishnan, Gautham Vasudev Menon, தலைவி, குயின், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு, ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவ் மேனன், j Deepa, Jayalalitha biography, jayalalitha biopic
Queen, A.L.Vijay, Kangana Ranaut, Thalaivi, Ramya Krishnan, Gautham Vasudev Menon, தலைவி, குயின், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு, ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவ் மேனன், j Deepa, Jayalalitha biography, jayalalitha biopic

‘தலைவி’ படத்துக்கும், ‘குயின்’ இணையதள தொடரும் வெளியாக தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், தடை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் “தலைவி” என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.

பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!

இந்த நிலையில், தன் அனுமதியில்லாமல்  ‘தலைவி’, ‘குயின்’ ஆகியவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைவி திரைப்படத்தையும், குயின் இணையதள தொடரையும் பார்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். படத்தை பார்த்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைவி திரைப்படம், தலைவி என்ற பெயரில் வெளியான புத்தகத்தை தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்த புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை. தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார்.

இணையதள தொடர் தயாரிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்த தொடர் தயாரிக்கப்படவில்லை. மாறாக குயின் என்ற புத்தகத்தை தழுவியே எடுக்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிலேயே இணையதள தொடர் தயாரிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு,
25 கோடி ரூபாய் செலவில் தொடரை தயாரித்துள்ள நிலையில், விளம்பரத்துக்காக கடைசி நேரத்தில் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார் எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், தனது வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருந்ததாக மனுதாரர் கூறுவது பொய். ஆனால், 2002 ஆம் ஆண்டுக்கு பின் அவர் ஜெயலலிதாவுடன் இல்லை எனவும், 2016ல் இறந்த பின் தான் வந்துள்ளார். அதனால், இந்த வழக்கை தாக்கல் செய்ய தீபாவுக்கு அடிப்படை உரிமை இல்லை எனவும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தலைவி திரைப்படத்தையும், குயின் இணையதள தொடரையும் வெளியிட தடை இல்லை எனவும் தடை விதிக்க கோரிய தீபா மனுவை நிராகரிப்பாதகாவும், குயின் திரைப்படத்தில் தீபா கதாப்பாத்திரம் இடம் பெறவில்லை என்ற கவுதம் மேனன் தரப்பு உத்தரவாதத்தை ஏற்பதாகவும் தலைவி படம் முழுக்க முழுக்க கற்பனையானது என அறிவிப்பு வெளியிட பட நிறுவனத்திற்கு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: No ban to thalaivi movie and queen web series madras high court order

Next Story
மேட்டுப்பாளையம் விபத்து : உரிமையாளரை எதிர்மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவுMettupalayam wall collapse incident
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com