/indian-express-tamil/media/media_files/jZ9VHzgIur7MlnEctVqR.jpg)
விஜயின் உத்தரவை த. வெ.க. கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18 ஆம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரும் உயிரிழந்துள்ளனர். தற்போது பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 49 ஆக அதிகரித்துள்ளது . மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று வியாழக்கிழமை ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், நாளை (ஜூன் 22 ஆம் தேதி) தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். விஜயின் உத்தரவை த. வெ.க. கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் @actorvijay அவர்கள் உத்தரவு!
— N Anand (@BussyAnand) June 21, 2024
தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து @tvkvijayhq…
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.