scorecardresearch

அரசு பஸ்களில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது: அரசாணை வெளியீடு

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

government bus

தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த அரசு பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று முன்பு தெரிவித்திருந்தனர். இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அரசு பேருந்துகளில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது; கட்டணமும் வசூலிக்கப்படாது.

மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: No bus fare for children upto five years old

Best of Express