Advertisment

ஒமிக்ரான் பரவல்! விமான நிலையங்களில் RT-PCR சோதனைகள் செய்ய ரூ.600 கட்டணம்!

புதன்கிழமை இரவு வரை 11 அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து 477 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவை அனைத்தும் நெகட்டிவ் என்று வந்தன.

author-image
WebDesk
New Update
ஒமிக்ரான் பரவல்! விமான நிலையங்களில் RT-PCR சோதனைகள் செய்ய ரூ.600 கட்டணம்!

தமிழகத்தில் வியாழக்கிழமை இரவு வரை புதிய கோவிட் -19 மாறுபாட்டான ஓமிக்ரான் வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Advertisment

புதிய மாறுபாடு பரவுவதைத் தடுக்க அதிகாரிகள் செயல்படுத்தி வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன், புதன்கிழமை இரவு வரை 11 அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து 477 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவை அனைத்தும் நெகட்டிவ் என்று வந்தன.

அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வருபவர்களின் மாதிரிகள் தமிழகத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. RT-PCR முடிவுகளைப் பெறுவதற்கு சுமார் ஐந்து-ஆறு மணிநேரம் ஆகும் என்பதால் பயணிகளுக்கு வசதியாக விமான நிலையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முடிவுகள் வரும் வரை மக்கள் தங்கும் இடத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படும். பரிசோதனையில் நெகட்டிவ், வந்தால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள், அதைத் தொடர்ந்து அவர்கள் ஏழு நாட்களுக்கு சுய தனிமையில் இருக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகாதாரம், வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்களின் ஏழு நாள் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த பிறகு, அவர்கள் மற்றொரு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சோதனையில் நெகட்டிவ் வந்தபிறகுதான் அவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள், "என்று அவர் கூறினார்.

அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ரேண்டம் பரிசோதனை நடத்தப்படும். RT-PCR சோதனைகளுக்கு, பயணிகள் 600 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில், இந்த நாடுகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் பிற நிதிநிலை பாதிக்கப்பட்டவர்கள் வரக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, ரேண்டம் ஆர்டி-பிசிஆர் சோதனைகளுக்கான செலவை மாநில சுகாதாரத் துறை ஏற்கும், ”என்று அவர் கூறினார்.

விரைவான RT-PCR சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணியன், அந்த வசதியைப் பெற விரும்பும் பயணிகள், ரூ. 3,400 கட்டணம் செலுத்தி அரை மணி நேரத்திற்குள் தங்கள் முடிவுகளைப் பெறலாம் என்றார்.

பயணிகளை பரிசோதிக்க மாநிலத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனை அமைப்பு உள்ளது. 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். 

அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் ஓமிக்ரான் பாசிட்டிவ் நோயாளிகளுக்கு மாநில அரசு சிறப்பு வார்டுகளை அமைத்துள்ளது.

சுகாதாரத் துறையின் தகவலின்படி, தமிழ்நாட்டில் 79 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுள்ளனர், 44 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் போட்டுள்ளனர். தடுப்பூசி போடாதவர்கள் விரைவில் எடுத்துக் கொள்ளுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடித்தால், ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Omicron Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment