Tamil Nadu News: ஜாதி பாகுபாடின்றி கொடியேற்றத்தில் மக்கள் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு அளித்துள்ளார்.
பேரூராட்சிகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஜாதி பாகுபாடின்றி சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் வி.இறை அன்பு ஆட்சியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்ளாட்சித் தலைவர்கள் யாரும் சுதந்திர தினத்தன்று ஜாதியின் அடிப்படையில் பாரபட்சம் பார்த்து தேசியக் கொடி ஏற்றக்கூடாது என்று தமிழக தலைமைச் செயலாளர் வி.இறை அன்பு, மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவின் கீழ் தீண்டாமைப் பழக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும், பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினருக்கு எதிரான எந்தவொரு பாகுபாடு நடத்தினாலும், சட்ட பிரிவுகளின் கீழ் அதற்கேத்த தண்டனை வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறார்.
மேற்கண்ட உத்தரவை அமல்படுத்துவதில் கலெக்டர்களுக்கு ஏதேனும் சிரமம் உண்டானால், அவர்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இரா அன்பு கூறுகிறார்.
இது தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக ஹெல்ப்லைன் ஒன்றை உருவாக்கி, அதற்கான அலுவலகத்தை நியமிக்கலாம் என்றும் அவர் கூறினார். விழாவை சுமுகமாக நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு முன்பாகவும், மற்றொரு அறிக்கையை ஆகஸ்ட் 17-ஆம் தேதியும் அனுப்பப்படும் என ஆட்சியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே, சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு பாதுகாப்புக் கோரி, தலித் பெண் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவர் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதனால், தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர, கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்கள் கூடி சுதந்திர தின விழாவில் பங்கேற்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil