scorecardresearch

ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court directs Vishal to furnish assets details
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்த மனேஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபா மாதம் பள்ளியில் சேர்க்க உள்ளேன். எனது மகனுக்கு ஜாதி, மதம் இல்லை எனக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோரி அம்பத்தூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. எனவே, ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் நேற்று(ஆகஸ்ட் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது,
சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக வட்டாட்சியர் அளித்த கடிதத்தை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். தமிழகத்தில் ஏற்கனவே பலர் இதுபோன்று தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: No caste no religion certificate to be issued within 2 weeks