/indian-express-tamil/media/media_files/2025/01/17/xFy2H7ExdwPxZHhRKAzK.jpg)
ஈரோடு இடைத்தேர்தல் - த.வெ.க போட்டி இல்லை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் த.வெ.க போட்டியிடாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே த.வெ.கவின் இலக்காகும் என த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையில வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்புற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், துனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
— TVK Party Updates (@TVKHQUpdates) January 17, 2025
அதன் அடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.