scorecardresearch

வீடுகளில் ஏ.சி, வாட்டர் ஹீட்டர் இருந்தால் கூடுதல் கட்டணமா? மின் வாரியம் விளக்கம்

தமிழகத்தில் மின்சார பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மின் பயன்பாடு
மின் பயன்பாடு

தமிழகத்தில் மின்சார பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை  ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிக மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்திருப்பதால், மின்பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் ஏ.சி போன்ற மின் சாதனப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏ.சி போன்ற மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் வீட்டுகளில் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் பயன்பாடு இருந்தால் அதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவியவியது.

இந்நிலையில் மின் ஒழுங்குமுறை  ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மின்வளங்கள் விதிகளில், நடைமுறைக்கு கொண்டு வரும் மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு நிலை கட்டணம் வசூலிப்பதிலிருந்து கடந்த 10.09.2022 முதல் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விலக்கும் இருக்கும்போது, நிலை கட்டணம் தொடர்பாக கூடுதலாக தொகை வசூலிக்கப்படும் என்ற செய்தி தவறானது என்று கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: No extra charges for extra current usage tamilnadu electric department