நவம்பர் 10 முதல் காவல்துறையினருக்கு விடுமுறை இல்லை – டி.ஜி.பி திடீர் உத்தரவு

காவல்துறையினருக்கு நவம்பர் 10-ஆம் தேதி முதல் விடுமுறை வழங்கக் கூடாது என காவல்துறை உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா். இந்த திடீர் உத்தரவால் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

no leave to police persons from novermber 10, no leave to police from november 10, காவல்துறையினருக்கு விடுமுறை இல்லை, டிஜிபி திரிபாதி உத்தரவு, நவம்பர் 10 முதல் காவல்துறையினருக்கு விடுமுறை இல்லை, police DGP J.K. Tripathy circular, DGP J.K. Tripathy, DGP Tripathy
no leave to police persons from novermber 10, no leave to police from november 10, காவல்துறையினருக்கு விடுமுறை இல்லை, டிஜிபி திரிபாதி உத்தரவு, நவம்பர் 10 முதல் காவல்துறையினருக்கு விடுமுறை இல்லை, police DGP J.K. Tripathy circular, DGP J.K. Tripathy, DGP Tripathy

காவல்துறையினருக்கு நவம்பர் 10-ஆம் தேதி முதல் விடுமுறை வழங்கக் கூடாது என காவல்துறை உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா். இதனால், காவல்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல்துறை டி.ஜி.பி ஜே.கே திரிபாதி காவல்துறை உயரதிகாரிகளுக்கு திங்கள்கிழமை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், “அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கும் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி முதல் விடுமுறை வழங்கக் கூடாது. சட்டம், ஒழுங்கு பாதுகாப்புக்காக அனைத்து அதிகாரிகளும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக அனைத்து காவலா்களையும் திரட்டும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், தமிழக அமைச்சர்கள் உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில் காவல்துறை டிஜிபியின் இந்த சுற்றறிக்கை வெளியாகி உள்ளது.

டி.ஜி.பி-யின் இந்த திடீர் உத்தரவால், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: No leave to police persons from novermber 10 police dgp j k tripathy circular

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express