Advertisment

போட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RRB RPF SI exam postponed, உயர்நீதிமன்றம்

tamil nadu news today live

போட்டி தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஐஐடி நுழைவுத்தேர்வில் தோல்விடைந்த நெல்சன் என்ற மாணவர், மறு மதிப்பீடு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், பிரதான தேர்வில் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலையில் 47 மட்டுமே எடுத்ததால் அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், எனவே தமது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை கடந்த 2013-ம் ஆண்டு விசாரித்த நீதிபதி சசிதரன், மாணவரை அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது, கல்வியில் முன்னேறிய கனடா, ஜெர்மனி நாடுகளில் கூட, நெகடிவ் மார்க் முறை பின்பற்றப்படவில்லை என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிபிஎஸ்சி மற்றும் பிற போட்டி தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற உத்தரவிட்டார்.

Chennai High Court Iit High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment