/indian-express-tamil/media/media_files/dv0KYHyFZjqfYYtO57Sw.jpg)
'தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது' மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பொங்கல் தினத்துக்கு மறுநாள் திருவள்ளூவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், ““தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” எனக் கூறியுள்ளார்.
இது குறித்த மேலும் அவர், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) January 16, 2024
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை… pic.twitter.com/wUuvMJ4q63
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.