திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பிள்ளையார் நத்தத்தில் நேற்று (நவ.23) சனிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் சி.பி.எம் பாலகிருஷ்ணன் கூறியது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
கூட்டணி என்பது திமுகவை பொருத்தவரையில் ஒரே கருத்துடைய இயக்கங்கள் காங்கிரஸ், சிபிஎம், சிறுபான்மை இயக்கம், முஸ்லிம் லீக் தொடர்ந்து 1967-ல் இருந்து கூட்டணியில் உள்ளனர். இன்று நேற்று இல்லை. அது அவர்களின் விருப்பம்.
இங்கு கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு வழங்கியது கிடையாது. கூட்டணியில் பங்கு இருக்கும். இடம் கேட்பார்கள் அதனை கொடுப்போம். ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுது கொடுத்தது இல்லை" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“