No power to form press council in state - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி பிரஸ் கவுன்சில் அமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசால் மட்டுமே இத்தகைய கவுன்சிலை உருவாக்க முடியும் என்றும், மாநில அரசுகள் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை மட்டுமே மாநில அரசுகளால் ஒழுங்குமுறைப்படுத்த இயலும் என்று தமிழக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்றத்தில் தெரிவித்தார். பொறுப்பு நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி. பரதா சக்கரவர்த்தி முன்னிலையில் வாதத்திற்கு வந்த இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலி 'மாஃபியா பத்திரிகையாளர்களிடமிருந்து' செய்தி ஊடகத் துறையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஆகஸ்ட் 28,2021 அன்று பிரஸ் கவுன்சிலை உருவாக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் அறிவித்தது. உச்சநீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநிலத்தில் உள்ள பிரஸ் க்ளப்கள் அல்லது பத்திரிகையாளர் சங்கங்கள் அங்கீகரிக்க கவுன்சிலுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது. சாதி, சமூகம் அல்லது மாநில எல்லைகளின் அடிப்படையில் கிளப்புகள் அல்லது சங்கங்களை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே இருக்கும் இத்தகைய க்ளப்புகள் தொடர்ந்து செயல்படவோ அனுமதிக்க இயலாது என்று நீதிமன்றம் கூறியது.
மேலும் பிரஸ் க்ளப் மற்றும் பத்திரிக்கையாளர் சங்கங்களுக்கான தேர்தலை பிரஸ் கவுன்சில்களே நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. ஒரு இடைக்கால நடவடிக்கையாக, கவுன்சில் அமைக்கப்பட்டவுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் இடைநிறுத்தப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் கவுன்சிலின் மேற்பார்வையில் அந்த அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil