அமித்ஷாவை பார்க்க வேண்டும் என்ற தேவை எங்களுக்கு இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
2024ம் ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ் “ நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பாஜக மற்றும் அதிமுக என்பது இரு வேறு கட்சிகள். தமிழகத்தில் அதிமுக முக்கிய எதிர்கட்சி. பாஜக ஒரு தேசிய கட்சி என்று கூறினார்.
மேலும் அமித்ஷா மற்றும் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களை சந்திக்க வேண்டும் என்பதில்லை என்றும் இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள் என்று அவர் கூறினார். மேலும் அமித்ஷா, பாஜகவின் மூத்த உறுப்பினர். தேவை ஏற்பட்டால் அவரை சந்திப்போம். ஆனால் இப்போது அப்படி எந்த தேவையும் இல்லை என்றார்.
மேலும் டிடிவி தினகரனுடன் சேரும் எண்ணம் இல்லை என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.