சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் 24 ஆசிரியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நலத் துறை இயக்குநருக்கு தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்கள் பல மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணி புரிந்து வருகிறார்கள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் பழங்குடியினர் நலத்துறை இயக்குநருக்கு மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், சேலம்
மேலும், அந்த மனுவில், இந்த பிரச்சினைகள் தொடர்பாக உயர் அலுவலர்களுக்கும் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களிடமும் பார்வை-1ல் கண்டுள்ளவாறு பலமுறை முறையிட்டும் நாளது தேதி வரை தீர்வு ஏற்படவில்லை.
சேலம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளி – உயர்நிலைப்பள்ளி – மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியர்
பணியிடங்களை ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளதாக அறிகிறோம்.
பார்வை-2ல் கண்டுள்ள பழங்குடியினர் நல இயக்குனர் அவர்களின் கடிதத்தில்
பழங்குடியினர் நல உண்டி உரைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகளில் ஒப்பளிக்கப்பட்ட
பணியிடங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் ஐகுர்சுஆளு
இணையதளத்தில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக
அறிக்கை கோரப்பட்டுள்ளது.
பார்வை-2ல் கண்டுள்ளவாறு சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளி விடுதிகளில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பழங்குடியினர் நல இயக்குனர் அவர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் சிலர் நாளது தேதி வரை மேற்கண்டவாறு எவ்விதமான அறிக்கையும் அனுப்பி வைக்காமலும் ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமலும்
மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பல மாதங்களாக ஆசிரியர்ககளுக்கான சம்பளம் மற்றும் இதர படிகள் சரியான முறையில் பெற
முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இப்பொருள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மேற்படி ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் இதரப்படிகள் விரைந்து கிடைக்க ஆவன செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“