தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ள புயல் சுழற்சி டிசம்பர் 15 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அடுத்த நாட்களில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்," இன்று 17ஆம் தேதி வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் பெரிய அளவில் மழை பெய்யாது. KTCC உட்பட தமிழகம் முழுவதும் மாலை/இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் சாதாரண நாளாக இருக்கும். பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு நன்றாக படிக்கின்றனர். அலுவலகம் செல்பவர்களுக்கு அதே பழைய சலிப்பான வாழ்க்கை. இனி 18 அன்று பாக்கலாம் எப்படி இருக்குனு" என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0imkx3pFgXcqjVezGCwVo1NkfBsE9QG8VGrPSrS4xJK4PuwYSXVPpGaE3snYMx7Fxl&id=100044481604368&sfnsn=wiwspmo&mibextid=RUbZ1f
அப்படியாக இன்று தமிழ்நாட்டில் பெரிய அளவிலான மழை இருக்காது என்றும் பள்ளி செல்லும் மாணவர்களும் அலுவலகம் செல்பவர்களும் தாராளமாக தங்களது பணிகளை தடையின்று செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“