Advertisment

வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடையா? ஐகோர்ட் விசாரணை

No stay on GO prescribing 10.5 per cent reservation to Vanniyars; chennai high court: வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு; யாருக்கும் பாதிப்பில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வாதம்

author-image
WebDesk
New Update
வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடையா? ஐகோர்ட் விசாரணை

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டு அரசாணையை, நீதிமன்றம் ஆராய்ந்து அதன் சட்டப்பூர்வ செல்லுபடியாக்கத்தை தீர்மானிப்பதற்கு முன் தமிழக அரசு செயல்படுத்த முயற்சித்தால் அரசாணைக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டு அரசாணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Advertisment

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கும் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் 10.5% உள் ஒதுக்கீடு வழங்க அவசர சட்டத்தை இயற்றியது அதிமுக அரசு.

சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அப்போதைய அதிமுக அரசால் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, வன்னியார் சமூகத்திற்கான இத்தகைய பிரத்யேக இட ஒதுக்கீட்டின் செல்லுபடியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ச்சியான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்தச் சட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு ஜூலை 26 அன்று அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து, இச்சட்டம் தொடர்பான வழக்குகளை அவசர வழக்குகளாக விசாரிக்கவும் இச்சட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு புதன்கிழமை அன்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுச் சட்டம் இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும், நீதிமன்றம் இச்சட்டத்தின் சட்டபூர்வ செல்லுபடியை ஆராயும் முன்னர் அமல்படுத்த முயற்சித்தால் சட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறினர்.

ஆனால் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற விசாரணையில், தமிழக அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ இச்சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 28 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், மேலும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும்,” கூறினார்.

அப்போது, நீதிபதிகள் இச்சட்டத்தை அமல்படுத்த ஏன் தடை விதிக்க கூடாது என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகளில் இந்த சட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும், இச்சட்டத்தால் யாரும் பாதிக்கப்படபோவதில்லை எனவும் எனவே உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

அப்போது, எம்.பி.சி பிரிவின் கீழ் வரும் பல்வேறு சமூகங்களின் சங்கங்கள் உள்ளிட்டவர்களின் மனுதாரர்கள், இடஒதுக்கீடு செயல்படுத்த அனுமதிக்கப்பட்டால், வன்னியகுலா க்ஷத்திரிய சமூகத்தின் கீழ் வரும் வன்னியர்கள் மற்றும் பிற துணை சாதியினர் உயர்கல்வி மற்றும் அரசு சேர்க்கையில் 10.5% இடஒதுக்கீட்டைப் பெறுவார்கள். அதேநேரம், எம்பிசியின் கீழ் உள்ள மற்ற 25 சாதிகளும், டி.சி.யின் கீழ் 68 சாதிகளும் மீதமுள்ள இட ஒதுக்கீட்டில் 7% பகிர்ந்து கொள்ள வேண்டும். என்று வாதிட்டனர்.

மேலும், இந்த பிரத்யேக இடஒதுக்கீடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும், மேலும் எம்.பி.சி பிரிவின் கீழ் வரும் சமூகங்களிடையே பகைமையை வளர்க்கும் என்று மனுதாரர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, நீதிபதிகள் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இந்த வழக்கை விசாரிப்பதாகக் கூறியுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Vanniyar Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment