பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இல்லாதது கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. மேலும் எதிர்கட்சி முதல் கூட்டணி கட்சிகள் வரை இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
எல்லா வருடமும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்நிலையில் இந்த வருடம் அரசு வெளியிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை. இது கரும்பு விவசாயிகளிடம் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டங்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுகையில், “ ஸ்டாலின் அரசு பொங்கல் பரித்தொகையான ஆயிரம் ரூபாய்யை ரூ. 5000 ஆக உயர்த்தி தர வேண்டும். ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது பொங்கல் பரிசுத்தொகை 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ” என்று அவர் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “ பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும். கூடுதலாக ஒரு கிலோ வெல்லத்தையும் சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.
கூட்டணிக் கட்சியான சிபிஎம் வெளியிட்ட அறிக்கையில் “ கரும்பு மற்றும் வெல்லத்தையும் பொங்கல் பரிசில் சேர்க்க வேண்டும். கூடுதலாக வழங்கப்படும் நெய் மற்றும் மசால பொருட்களையும் வழங்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படிதான் வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபோல இந்தி மக்கள் கட்சி, டிடிவி தினகரன் மற்றும் பாமகவும் கடுமையாக விமர்சித்து உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு சார்ப்பில் எந்த விளக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜனவரி 2-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.