சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.
சிதம்பரம் நடராஜ கோவில் தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக புகார்கள் எழுந்தது.
அதன் அடிப்படையில், கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்.
இதனிடையே, தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு தடைசெய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது பரபரப்பை கிளப்பியது.
இதனிடையே தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குழுவினர் தங்களுடன் மருத்துவ குழுவுடன் நேரில் விசாரணை நடத்தினர்.
அங்கு, குழந்தை திருமணம் செய்துவைத்த தீட்சிதர்களின் குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் உறுப்பினர் ஆனந்த், "குழந்தை திருமணம் நடைபெற்றதற்கு சாட்சிகள் இல்லை", என்றும், "காவல்துறையினர் கட்டாயப்படுத்தியதால் தான் தீட்சிதர்களின் குழந்தைகள் ஒப்புக்கொண்டனர்", என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil