Advertisment

உங்களிடம் ஓட்டர் ஐ.டி இல்லையா? பரவாயில்லை, நீங்கள் வாக்களிக்க இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது என்றால், இந்த ஆவணங்கள் இருந்தால் போதும் நீங்கள் உங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம்.

author-image
WebDesk
New Update
Interim unity govt common voter list Law panel readies report on simultaneous polls Tamil News

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் வாக்களிப்பது என்பது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஜனநாயகக் கடமை அனைவரும். அதனால், அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்.

Advertisment



நீங்கள் இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக உள்ளீர்கள் என்றால், உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தும், உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை என்கிற ஓட்டர் ஐடி இல்லையா? அல்லது நீங்கள் தவறுதலாக எங்கேயாவது மறந்து வைத்துவிட்டீர்களா, கவனக் குறைவாக தொலைத்துவிட்டீர்களா? பரவாயில்லை. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் போதும், இந்த ஆவணங்கள் இருந்தால் போதும் நீங்கள் உங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம். அப்படி என்னென்ன ஆவணங்கள் இருந்தால் நீங்கள் வாக்களிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்பு நீங்கள், voters.eci.gov.in என்ற இணையதளத்தில், உன்க்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்களது அடையாளத்திற்காக, அசல் கடவுச் சீட்டனை வாக்குச்சாவடியில் காண்பிக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் நீங்கள் வாக்களிப்பதற்கு பின்வரும் ஆவணங்கள் ஏதேனும் ஒன்றை உங்களது அடையாளச் சான்றாக வாக்குச்சாவடியில் பயன்படுத்தலாம். 

*புகைப்படத்துடன் கூஉடிய வாக்காளர் அடையாள அட்டை (EPIC)

*ஆதார் அட்டை

*நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் அட்டை - PAN Card) 

*மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை

*மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

*புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்

*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை

*மத்திய/மாநில அரசுகள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைபடத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

*ஓட்டுநர் உரிமை (டிரைவிங் லைசென்ஸ்)

*இந்தியக் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்)

*தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைஐப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை

*ஓய்வூதிய ஆவணம்

*நாடாளுமன்ற/ சட்டமன்றப் பேரவை/ சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை 

மேற்கண்ட ஆவணங்களில் ஒன்றை நீங்கள் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம். 

மேலும், வாக்காளர் தகவல் சீட்டினை அடையாளச் சான்றாக காண்பிக்க இயலாது. நீங்கள் வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை அல்லது மேற்கூறிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்றாக எடுத்துச் செல்லலாம். அதனால், உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்று கவலைப்பட வேண்டாம். உங்களிடம் மேற்கண்ட ஆவணங்களில் ஒன்று இருந்தால் போதும், நீங்கள் ஓட்டு போடலாம். வாக்களித்து உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) வழங்கப்பட்ட அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு முன் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது அவர்களின் அடையாளத்தை வாக்குச் சாவடியில் சமர்ப்பிக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சமீபத்திய செய்திக்குறிப்பில் உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment