Advertisment

வட சென்னையில் யார் முதலில் வேட்புமனு தாக்கல்? தி.மு.க - அ.தி.மு.க போட்டி: சேகர்பாபு - ஜெயக்குமார் வாக்குவாதம்

வட சென்னை தொகுதியில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரே நேரத்தில் வந்ததால், யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என போட்டியும் மோதலும் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
clash in nomination

வட சென்னையில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என தி.மு.க - அ.தி.மு.க வேட்பாளர்கள் இடையே போட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வடசென்னை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ இருவரும் திங்கள்கிழமை (25.04.2024) வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வந்ததால், யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்று மோதல் ஏற்பட்டது. அப்போது, உடன் வந்த அமைச்சர் சேகர்பாபு, ஜெயக்குமார் இருவரும் தேர்தல் அதிகரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி 3 முன்று அணிகள் தேர்தலை எதிர்கொள்கின்றன. மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தி.மு.க, அ.தி.மு.க, வி.சி.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். 

அந்த வகையில், வடசென்னை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால், யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்று மோதல் ஏற்பட்டது. 

வட சென்னை தொகுதி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட தி.மு.க-வினருடன் வேட்புமனு தாக்கல் செய்ய மிண்ட் பகுதியில் அமைந்துள்ள வட சென்னை தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார். 

இதற்கு முன்னதாக, வட சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க-வினருடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். 

வட சென்னை தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு தி.மு.க  வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ இருவரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரே நேரத்தில் வந்ததால் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பதில் மோதல் ஏற்பட்டது.

அ.தி.மு.க தரப்பில் தாங்கள்தான் முதலில் வந்தோம், அதனால், எங்களைத்தான் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அப்போது, தி.மு.க தரப்பில், நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக 2 நம்பர் டோக்கன் வாங்கியிருக்கிறோம். எங்கள் டோக்கன் நம்பர்தான் முதலில் வருகிறது என்று கூறி தங்களை முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வேட்புமனு செய்வதற்கான நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த டோக்கனை வெட்பாளர்கள் நேரில் வந்து பெற வேண்டும். அதன்படி, தி.மு.க வேட்பாளர் தரப்புக்கு 2வது நம்பர் டோக்கன் வழங்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளருக்கு 7வது நம்பர் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டு, தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி தரப்பில் தாங்கள்தான் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். இதற்கு, அ.தி.மு.க வேட்பாளர் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார். தி.மு.க வேட்பாளர் நேரில் வந்து டோக்கன் வாங்கவில்லை, தாமதமாக வந்தார் அதனால், தி.மு.க வேட்பாள்ரை முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் அ.தி.மு.க வேட்பாளரை முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தார். இதனால், வட சென்னை தொகுதி மண்டல தேர்தல் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, வட சென்னை தொகுதி தேர்தல் அதிகாரி உயர் அதிகாரிகளிடம் போனில் தொடர்புகொண்டு, தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர் நேரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டோக்கன் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் முதலில் வந்தவர்கள் முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அதனால், அ.தி.மு.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, தி.மு.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கூறினார். ஆனால், இதை தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஏற்க மறுத்தனர்.

இதனிடையே, தி.மு..க வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் மனைவி மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேரில் வந்து 5வது நம்பர் டோக்கன் பெற்றிருந்ததால், அவர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு..க வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் மனைவி மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்

பின்னர், வேட்புமனு தாக்கல் செய்ய முதலில் வந்த அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து, வட சென்னை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ வேட்புமனு தாக்கல் செய்தார். 

இதையடுத்து, தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்ய வேட்புமனு பெறப்பட்டது.

வட சென்னை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்று தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் திரண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கையாக, மிண்ட் பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனிடையே, வடசென்னை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் பால் கனகராஜ், பா.ஜ.க-வினருடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே நீண்ட நேரமாகக் காத்திருந்தார். பொறுமை இழந்த பா.ஜ.க தொண்டர்கள், தி.மு.க - அ.தி.மு.க வேட்பாளர்களின் பிரச்னை பஞ்சாயத்தை பிறகு பேசி தீர்த்துக்கொள்ளுங்கள், எங்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடுங்கள் என்று கூறி வாக்குவாதம் செய்து கதவைத் திறந்துகொண்டு தேர்தல் அலுவலகத்துக்குள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மற்றும் பா.ஜ.க-வினர் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை கண்டித்து முழக்கமிட்டனர்.

வட சென்னை தொகுதியில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரே நேரத்தில் வந்ததால், யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என போட்டியும் மோதலும் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment