2024 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
2024 மக்களவை தேர்தல் நாட்டில் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்.19ஆம் தேதி தொடங்கியது. நிறைவுகட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது. இந்த 7 கட்டங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன.
Advertisment
முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில், வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி 35,087 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். இரண்டாம் இடத்தில் அதிமுக வேட்பாளரும், மூன்றாம் இடத்தில் பா.ஜ.க.வின் பால் கனகராஜ்யும் காணப்பட்டனர்.
வடசென்னை மக்களவை தொகுதி
தமிழ்நாட்டின் இரண்டாவது மக்களவை தொகுதி என்ற பெருமையை வடசென்னை பெறுகிறது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், வடசென்னை தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
Advertisment
Advertisements
சட்டமன்ற தொகுதிகள்
திருவொற்றியூர்
ராதாகிருஷ்ணன் நகர்
பெரம்பூர்
கௌத்தூர்
திரு.வி.க. நகர் (தனி)
இராயபுரம்
இந்தத் தொகுதியில் அதிகப்பட்சமாக 64.91 சதவீதம் வரை வாக்குகள் 2009 மக்களவை தேர்தலில் பதிவாகின. 2019ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 7,20,133 ஆண்களும், 7,47,943 பெண்களும் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் தவிர 341 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள்
காங்கிரஸ் காலத்துக்கு பிறகு வட சென்னை மக்களவை தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்தத் தொகுதியில் 2014ல் அதிமுக வெற்றிக் கொடி நாட்டியது. எனினும், 2019ல் தொகுதி மீண்டும் தி.மு.க. வசம் வந்தது.
ஆண்டு
வெற்றி பெற்றவர்கள்
கட்சி
1957
எஸ்.சி.சி அந்தோணிப் பிள்ளை
சுயேச்சை
1962
பொ. சீனிவாசன்
காங்கிரஸ்
1967
கி. மனோகரன்
திமுக
1971
கி. மனோகரன்
திமுக
1977
ஏ.வி.வி ஆசைத்தம்பி
திமுக
1980
கோ. லட்சுமணன்
திமுக
1984
என்.வி.என் சோமு
திமுக
1989
தா. பாண்டியயன்
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி
1991
தா. பாண்டியன்
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி
1995
என்.வி.என் சோமு
திமுக
1998
செ. குப்புசாமி
திமுக
2004
செ. குப்புசாமி
திமுக
2009
டி.கே.எஸ் இளங்கோவன்
திமுக
2014
வெங்கடேஷ் பாபு
அ.தி.மு.க
2019
கலாநிதி வீராசாமி
தி.மு.க
2024 மக்களவை தேர்தல் வடசென்னை போட்டியாளர்கள்
2024 மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் 60.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பி. கலாநிதி வீராசாமி, பா.ஜ.க சார்பில் பால். கனகராஜ், அ.தி.மு.க சார்பில் ராயபுரம் மனோ, நாம் தமிழர் கட்சி தரப்பில் அமுதினி உள்ளிட்ட பலர் களத்தில் இருந்தனர்.
தி.மு.க. வெற்றி
கலாநிதி (தி.மு.க.)
4,97,333
ராயபுரம் மனோ (அ.தி.மு.க)
1,58,111
பால் கனகராஜ் (பா.ஜ.க)
1,13,318
அமுதினி (நாம் தமிழர்)
95954
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“