/tamil-ie/media/media_files/uploads/2020/09/cats-11.jpg)
North east monsoon Chennai corporation clears all the blockages in sewage for waterlog free roads : வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மழைகாலத்தில் நீர் தேங்குவதால் மக்கள் பயன்பாட்டிற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் நிலை சென்னையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் மழைகாலம் துவங்குவதற்கு முன்பு, மழைநீர் வடிகால் கால்வாய்க்குள் மனிதர்கள் இறங்கி அதனை சுத்தம் செய்வார்கள். ஆனால் முழுமையாக கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்கள் நிலவி வருகிறது. மழை நீர் தேங்கியிருக்கும் போது பாதசாரிகள் நடந்து செல்வது என்பது மிகவும் சிக்கலான காரியமாகவே இருக்கிறது.
ரிமோட் கண்ட்ரோலின் உதவியால் இயங்கும் இயந்திரத்துடன் கூடிய 7 வாகனங்களை புனேவில் இருந்து தற்போது வாங்கியிருக்கும் சென்னை மாநகராட்சி, அதனை பயன்படுத்தி வடிகாலில் இருக்கும் அடைப்புகளையும், குப்பைகளையும் நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
கல், ப்ளாஸ்டிக், மண் போன்ற கழிவுகளை தனியாக பிரித்து கழிவு நீரை சுத்தம் செய்கிறது இந்த கருவி. ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருக்கும் மழைநீர் வடிகால் பகுதிகளை தூர்வாரும் பகுதிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.