‘எங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்க’ வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

chennai lockdown news: சென்னை பல்லாவரம் வட மாநில தொழிலாளர்கள் போராட்டம்.

Tamil News Live Updates
Tamil News Live Updates : உயர்நீதிமன்றம் ஆணை

சென்னையில் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க கோரி சென்னை பல்லாவரம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி நூற்றுக்கணக்கானோர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் சென்னைக்கு வந்து கட்டட வேலை மற்றும் பல்வேறு வேலைகள் செய்து வருகின்றனர். இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், ரயில், பேருந்து, விமானம் என அனைத்து போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டதால், சென்னையில் வேலை செய்துவந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்கிவிட்டனர்.


சென்னையில் வருமானம் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரசி மளிகைப் பொருட்களை வழங்கியது. சென்னையில் அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. உணவின்றி தவித்த தொழிலாளர்களுக்கு தன்னார்வலர்கள் சிலர் அவர்களுக்கு உணவு விநியோகித்தனர்.

இதனிடையே, திருச்சியில் குடும்பத்துடன் வேலை செய்துவந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் சொந்த ஊருக்கு கால் நடையாகவே செல்ல முயன்ற செய்தி ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சுகாதார்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு இடத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்களைப் பற்றி மகாராஷ்டிரா அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மத்திய அரசும், அந்தந்த மாநிலங்களில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில், ஊரடங்கு முடிந்தால், தங்கல்
பொதுமுடக்கம் முடிந்தால் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று காத்திருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இன்று காலை சென்னை பல்ல்லாவரம் பொழிச்சலூர் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல, பல்வேறு இடங்களில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள முக்கிய சாலையில் திரண்டு தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போராட்டத்ஹ்டில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

வட மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடுமாறு கூறினர். மேலும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அண்மையில், தமிழக அரசு ஏற்கெனவே, வெளிநாடுகளில் தங்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்புவதற்கு http://www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யுமாறு அறிவித்திருந்தது. வடமாநில தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புவோர் http://www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பழுப்பு நிற பட்டனை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளது.

அதே போல, வெளி மாநிலங்களில் தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப http://www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் சிவப்பு பட்டனை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: North indian labors protest at pallavaram velachery in chennai they sought to return to native state

Next Story
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனாcoronavirus, tamil nadu covid-19 postive case counts rises, covid-19 positive case rises in tamil nadu, கொரோனா வைரஸ், கொரோனா வைஸ் பாதிப்பு தினசரி ரிப்போர்ட், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு, தமிழக அரசு, tamil nadu government, tamil coronavirus case daily report, covid-19 positive report today, today covid-19 positive report, coronavirus, tamil nadu health and family welfare department
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com