scorecardresearch

சென்னையில் பீகார் குழு; வட மாநில தொழிலாளர்களுடன் சந்திப்பு

இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளை சந்தித்தவுடன், தங்களது ஆய்வை முடித்துவிட்டு பீகார் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் பீகார் குழு; வட மாநில தொழிலாளர்களுடன் சந்திப்பு
பீகார் மாநில கிராமப்புற மேம்பாட்டு துறை செயலர் பாலமுருகன் (Source: ANI)

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் வைரலாக வீடியோ பரவப்பட்டது. இதனால் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த வீடியோ, போலியான பதிவு என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் நிலை என்ன என்பதைக் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக நான்கு அதிகாரிகளை கொண்ட பீகார் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர்.

இந்த குழு இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் திருப்பூர் சென்று வடமாநில தொழிலாளர்களை நேரில் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, தற்போது சென்னையில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டுள்ளனர். தமிழகத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது, என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை பற்றின கருத்துக்களை கேட்டறிந்தனர்.

மேலும், இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளை சந்தித்தவுடன், தங்களது ஆய்வை முடித்துவிட்டு பீகார் செல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழகத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்களை பீகார் அரசுக்கு இந்த குழுவினர் தெரிவிக்க உள்ளனர்.

மேலும், தமிழக அரசு தற்போது எடுத்துள்ள முடிவு திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ள இந்த குழு, வடமாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்திருக்கிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: North indian workers meet bihar rural development department secretary balamurugan team

Best of Express