போதைப் பொருள் விவகாரம் காரணமாக வடமாநில இளைஞர் ஒருவர் நடுரோட்டில் கொலை. சென்னையில் எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் பூந்தமல்லி சாலையில் நேற்று போதைப் பொருள் கேட்ட வடமாநிலத்தவரை நேற்று தாக்கியுள்ளனர் இருவர்.
Advertisment
பாரிமுனையில் இருந்து கோயம்பேடு செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஒரு தனியார் உணவு விடுதியின் முன்பு அமர்ந்திருந்தார் வட மாநிலத்து இளைஞர் ஒருவர். அவ்வழியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த வட மாநில இளைஞரிடம் எதையோ விசாரித்து பின்னர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த தாக்குதலில் நிலை குலைந்து நின்ற வடமாநிலத்தவர் சிறிது நேரத்தில் மாநகர பேருந்தில் மோதி உயிரிழந்தார். அவரை தாக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Advertisment
Advertisements
இருவருக்கும் பயந்து அந்த வடமாநிலத்தவர் ஓடிச் சென்றாரா, அல்லது அவரை தாக்கி சாலையில் அவ்விருவரும் தூக்கி வீசினார்களா என்ற ரீதியில் விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும், அதற்காக சண்டையிட்டுக் கொள்வதும், அதனை பயன்படுத்தி விபத்தி உயிரிழப்பதும் சமீப காலத்தில் மிகவும் அதிகரித்திருக்கிறது.