வடகிழக்கு பருவமழை திங்கள்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சென்னை மாநகராட்சி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் தயார்நிலையில் உள்ளது.
மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் விடுபட்ட பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான தற்காலிக ஏற்பாடுகளை உருவாக்கும் பணிகளை மூத்த அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கண்காணித்தனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நிவாரண மையங்கள் மற்றும் சமுதாய நல சமையல் கூடங்களை ஆய்வு செய்து பார்வையிட்டார். மழைக்காலங்களில் உள்ளூர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்காக 300 இடங்களில் நிவாரண மையங்கள் மற்றும் சமையலறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு சமைக்க வசதிகளை வழங்க 200 வார்டுகளில் தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்படக்கூடிய வார்டுகளில் 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிகாரி கூறினார்
மொத்தம் 13,086 தன்னார்வலர்கள் பருவமழையின் போது உதவி செய்ய பதிவு செய்துள்ளனர். இதில் பலர் கல்லூரி மாணவர்கள். இந்தாணடு ஆண்களை விட பெண்களே அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர். 6,071 ஆண்கள், 7,003 பெண்கள் மற்றும் 12 திருநங்கைகள் தன்னார்வ பணிக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல் முறையாக இந்தாண்டு 10,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“