Advertisment

இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை - வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வடகிழக்கு பருவ மழை, பாலச்சந்திரன்

வடகிழக்கு பருவ மழை, பாலச்சந்திரன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். வங்க கடலில் நிலவும் வளி மண்டலம் மேலடுக்கு வலுப்பெற்று, வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கும் .

வங்கக் கடலில் மீனவர்கள் 12 மணி நேரத்திற்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.  கடலில் காற்று 35 கி.மீ. வேகத்துக்கு மேல் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்" என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : சென்னையில் மழை...பொதுமக்கள் மகிழ்ச்சி!

Rain In Tamilnadu Balachandran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment