கலைஞர் அறிவாலய மண்டபத்தில் அசைவ விருந்துக்கு அனுமதி இல்லை; மேலாளரின் ஆடியோவால் சர்ச்சை!
திருச்சி கலைஞர் அறிவாலய மண்டபத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சுத்த சைவ விருந்துக்கு மட்டுமே அனுமதி என்று அதன் மேலாளர் நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்டு விசாரித்த இஸ்லாமியர் ஒருவரிடம் கறாராக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கலைஞர் அறிவாலய மண்டபத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சுத்த சைவ விருந்துக்கு மட்டுமே அனுமதி என்று அதன் மேலாளர் நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்டு விசாரித்த இஸ்லாமியர் ஒருவரிடம் கறாராக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் அறிவாலய மண்டபத்தில் அசைவ விருந்துக்கு அனுமதி இல்லை; மேலாளரின் ஆடியோவால் சர்ச்சை!
திருச்சியில் உள்ள தி.மு.க அலுலகமான கலைஞர் அறிவாலய மண்டபத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சுத்த சைவ விருந்துக்கு மட்டுமே அனுமதி என்று அந்த மண்டபத்தின் மேலாளர் நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்டு விசாரித்த இஸ்லாமியர் ஒருவரிடம் கறாராக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி வைத்திருந்தால் தாக்குதல், மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் அடித்துக் கொலை, ரயில் பயணங்களில் சைவ உணவு என்று நிகழ்வுகள் செய்தியாகிறபோது, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன.
அதே போல, சென்னை ஐ.ஐ.டி-யில் மாட்டிறைச்சி உணவு அனுமதிக்கப்படுவதில்லை என்ற விவகாரம் சர்சையானபோது, திராவிட இயக்க ஆதரவாளர்கள், இடதுசாரிகள், வி.சி.க போன்றவர்களால் பொதுவில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, சென்னை, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மாட்டிறைச்சி உணவு சாப்பிடும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
Advertisment
Advertisements
இந்நிலையில், கலைஞர் அறிவாலய மண்டபத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சுத்த சைவ விருந்துக்கு மட்டுமே அனுமதி என்று அந்த மண்டபத்தின் மேலாளர் கறாராக கூறும் செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க விமர்சிக்கும் தி.மு.க தங்களுடைய மண்டபங்களிலேயே அசைவ விருந்துகளுக்கு அனுமதி அளிப்பதில்லை, இது தி.மு.க-வின் இரட்டைவேடம் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
திருச்சியில் உள்ள தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அதனால், தஞ்சாவூரைச் சேர்ந்த இர்ஷாத் என்பவர், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கல்யாண மண்டப மேலாளர் வெங்கடேசன் என்பவரைத் தொடர்பு கொண்டு, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வாடகை விவரங்களை விசாரித்துள்ளார். அதற்கு, அந்த மேலாளர், காலியாக இருக்கும் தேதிகளைக் கூறுகிறார். பின்னர், கலைஞர் அறிவாலயம் திருமண மண்டபத்தில் நடத்தும் நிகழ்ச்சிகளில் சுத்த சைவம் விருந்துக்கு மட்டுமே அனுமதி என்று கூறுகிறார்.
அப்போது முஸ்லிம்கள் இங்கே நிகழ்ச்சிகளை நடத்த முடியாதா என்று இர்ஷாத் அஹமது கேட்டதற்கு, அந்த மேலாளர், இல்லை சார், இங்கே பியூர் வெஜிடேரியன் மட்டும்தான் அனுமதி என்று கூறுகிறார்.
இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த இர்ஷாத் அஹமது, திராவிட பாரம்பரியத்தில் வந்து இப்படி சொல்லலாமா என்று கேட்டதற்கு, அந்த மேலாளர், திராவிட பாரம்பரியத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட பாரம்பரியமே ஐயர்கள் மாதிரிதான். தமிழ்நாடு அளவில் இருங்கிற எங்கள் மண்டபங்களில் வெஜிடேரியன்தான். கொள்கையில்தான் திராவிடம் வெஜிடேரியன் எங்கள் பாரம்பரியம் இதுதான்.” என்று மேலாளர் இயல்பாகக் கூறுகிறார். மேலும், வாடகை எவ்வளவு என்று கேட்டதற்கு ரூ.3 லட்சம் என்று மேலாளர் பதிலளிக்கிறார். மேலும் தனது பெயரை வெங்கடேசன் என்றும் தெரிவிக்கிறார். இந்த செல்போன் உரையாடலைக் குறிப்பிட்டு தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"