ரூ. 6000 வெள்ள நிவாரண நிதி பெற குடும்ப அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சந்தேகங்களைத் தீர்க்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3, 4 மிக்ஜாம் புயலால் கனமழை பெய்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 ஆயிரம் உதவித் தொகை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இன்று வேளச்சேரியில் ரூ. 6000 நீவாரண தொகை வழங்கும் நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணத் தொகையை பெற டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கனில் கொடுக்கப்பட்ட தேதிகளில் நியாயவிலை கடையில் வெள்ள நிவாரணம் பெற முடியும். மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், டோக்கன் கிடைக்காதவர்கள் நியாய விலை கடைகளில் உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிவாரணத் தொகை தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள் : 1100, 044 28592828. இந்த எண்களை மக்கள் அழைத்து சந்தேகங்களைத் தீர்த்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil