2023 Tamil Nadu Government holiday announced : 2022-ம் ஆண்டு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் இரண்டரை மாதங்களில் 2023-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2023-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 1-ந் தேதி வங்கி கணக்கு முடிக்கும் நாள் தவிர மற்ற பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் மூடப்பட வேண்டும். இது தவிர அனைத்து சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அரசு விடுமுறை அறிவித்துள்ள நாட்களில், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தைபூசம், விநாயகர்சதூர்த்தி, தீபாவளி ஆகிய முக்கிய விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும், ரம்ஜான் மொகரம் பண்டிகைகள் சனிக்கிழமைகளிலும் வருகிறது. பொங்கல் கிறிஸ்துமஸ் தமிழ்புத்தாண்டு ஆகியவற்றை ஒட்டி தொடர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil