திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதிகப்படியாக விடுமுறை கிடைக்கும். காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி தொடங்கி டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வரை விடுமுறைகள் கிடைக்கும். இதனிடையே அதிகமாக மழை பெய்தால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்படும்.
இந்நிலையில், வரும் நவம்பர் 13-ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகப்புகழ் பெற்ற திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 7-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறுவதால், அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“