காங்கிரஸின் மறைந்த மூத்தத் தலைவரும், நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலுமான சி. ராஜகோபாலாச்சாரியாரின் கொள்ளு பேரன் சி.ஆர். ராகவன்.
ராகவன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிப்.23ஆம் தேதி விலகினார். இந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துக் கொண்டார். ஏ.கே. அந்தோணி, சோனியா காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆவார்.
இதற்கிடையில் தற்போது சி.ஆர். ராகவன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இது குறித்து அவர், “வெளிநாட்டில் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை விட்டுவிட்டு, நம் நாட்டுக்கு சேவை செய்ய இந்தியா திரும்பினேன். அனைவரையும் உள்ளடக்கிய தேசிய மாற்றத்தின் இலக்கில் உறுதியுடன் இருந்த ஒரு சித்தாந்தத்தால் உந்தப்பட்டு, நான் 2001 இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்.
ஆனால் உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. கட்சி தற்போது எதை அடையாளப்படுத்துகிறதோ, எதை முன்னிறுத்துகிறதோ அல்லது பிரச்சாரம் செய்ய விரும்புகிறதோ அதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று இனி நல்ல மனசாட்சியுடன் என்னால் சொல்ல முடியாது. இதனால்தான் நான் சமீபத்தில் தேசிய அளவில் ஒரு நிறுவனப் பொறுப்பை நிராகரித்தேன், மேலும் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்பதைத் தவிர்த்தேன்.
முன்னதாக கேசவனின் ராஜினாமா மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அதிருப்தி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர், கேசவன் கட்சியை விட்டு வெளியேறுவது வருத்தமாக உள்ளது. இது தூண்டுதலின் பேரில் இருக்கலாம்” என்றார்.
கேசவன் 2001 இல் காங்கிரஸில் சேர்ந்த பிறகு, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் போன்ற பதவிகளை வகித்தார்.
தொடர்ந்து, பிரசார் பாரதி வாரிய உறுப்பினர், இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய கவுன்சில் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்தார்.
நேஷனல் மீடியா பேனலிஸ்ட், ஆங்கிலச் செய்தி சேனல்களில் அவர் பரிச்சயமான முகமாக இருந்தார்.
கேசவனுக்கு காங்கிரஸில் பல்வேறு பதவிகள் கொடுத்த போதிலும் அவர் தேர்தல் அரசியலில் இருந்து தள்ளியே இருந்தார். மக்களவை தென்சென்னை தொகுதியில் போட்டியிட முயன்றும் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
இந்தத் தொகுதியில் குஷ்பூவும் போட்டியிட விரும்பினார். ஆனால் கடைசி நேரத்தில் தொகுதி தி.மு.க. வசம் சென்றுவிட்டது. இந்த நிலையில் பாஜகவுக்கு வந்துள்ள கேசவனை குஷ்பூ வரவேற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“