புதுச்சேரி கடந்த மார்ச் மாதம் அமைச்சராக பதவியேற்ற திருமுருகனுக்கு இதுவரை இலாகா ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில் அவருக்கு குடிமைப்பொருள் வழங்கல் துறை மற்றும் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமாரின் இலாக்கா மாற்றப்பட்டு அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஒதுக்கீடு.
இலக்காக மாற்றம் தொடர்பான கோப்பினை இன்று காலை முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இன்று காலை வழங்கிய நிலையில் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“