Advertisment

'தேவதாசி' பற்றிய ஒரு முழுமையான புரிதல் இல்லை - நிருத்யா பிள்ளை

சீர்திருத்த வாதிகளுக்கு இசை வெள்ளாளர் சமூகத்தை பற்றிய ஒரு முழுமையான புரிதல் இல்லை. இசை  வெள்ளாளர் தாய் வழிஉறவு முறைச் சமூகங்கள். அங்கு பெண்கள் பல உரிமைகளை அனுபவித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'தேவதாசி' பற்றிய ஒரு முழுமையான புரிதல் இல்லை - நிருத்யா பிள்ளை

கடந்த மாதம், சென்னையின் புகழ்பெற்ற மார்கழி மஹோத்ஸவ விழாவில், பிரம்மா கணசபாவில் 32 வயதான நிருத்யா பிள்ளை தனது பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். வழக்கமான பாரம்பரிய கடவுள் நன்றி பாடலுடன் தனது நடனத்தை இவர் முடிக்கவில்லை. மாறாக "ஜெய் பீம்” என்று கோஷமிட்டு, இந்திய அரசியலமைப்பின் முன்னுரையைப் சத்தமாக படித்தார்.  சபையில் இருந்து கலை ஆர்வலர்களை இந்த செயல் ஆச்சரியப்படவைத்தது

Advertisment

நிருத்யா பிள்ளை கலையின் வெளிப்பாடை சில வருடங்களாக கவனித்து வரும் ஆர்வலர்களுக்கு  இந்த செயல் நிச்சயமாக வியப்பளிக்காது. இவர் பரதக்கலையின் பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றாலும், பரதநாட்டியம் குறித்த கடுமையான கேள்விகளையும் முன்வைக்கின்றார்.

நிருத்யா பிள்ளை, பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் வாழும் பரம்பரை இசை சமூகமான இசை வெள்ளாளரைச் சேர்ந்தவர். 'தேவதாசி' என்று அழைக்கபப்டும் இந்த இசை வெள்ளாளர் சமூக பெண்கள் கோயில்களில் அரங்கேற்றப்படும் பாரம்பிரிய நடனம், இசை மூலமாக சமூக அடையாளத்தைப் (சமூக அந்தஸ்த்தை) பெற்றனர்.

தேவதாசி முறை மிகவும் 'ஒழுக்கக்கேடானது', 'பெண்கள் மதிப்பைக் கொச்சைப்படுத்தும் செயல், 'விபச்சாரத்திற்கு நிகரானது' என்ற கருத்து மேலோங்கிய காரணாத்தால் 1920 களில் தேவதாசி முறை முற்றிலும் அகற்றப்பட்டது.

இசை வெள்ளாளர் சமூகத்தில் இன்று வரை பரதநாட்டியத்தை கடைபிடுக்கும் ஒரு சிலரில் நிருத்யா  பிள்ளையும் அடங்குவார். 1930 கால கட்டங்களில் கூட, சென்னை மியூசிக் அகாதெமியில்  (கலை மன்றம் ) தேவதசி சமூகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். உதாரணமாக புகழ்பெற்ற பாலசரஸ்வதி, கும்பகோணம் வரலட்சுமி, பானுமதி போன்றவர்கள் இந்த கலை மன்றத்தில் தங்கள் நடனங்களை வெளிபடுத்தினர்.

தற்போதுள்ள சபாக்களில் எங்களை போன்றோருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது ஏன்? இந்த மார்கழி மஹோத்ஸவ விழாவில் எனக்கு ஏன் இரண்டு மேடைகள் மட்டும் ஒதுக்கப்பட்டன?  என்று வினவுகிறார் நிருத்யா.

நிருத்யாவின் நாட்டியா வெளிப்பாடுகளும், பேச்சுகளும் (வரலாற்று நிரைந்த) அவரின் பாரம்பரியத்தை பற்றியது.  மீட்டெடுப்பதற்கான தேடலைப் பற்றியது.

தேவதாசி முறையை ஒழிப்பதற்கான 1927 சட்டத்தை மருத்துவ பயிற்சியாளரும், மெட்ராஸ் சட்டமன்றக் குழுவின் உறுப்பினருமான முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தார். முத்துலட்சுமி ரெட்டியின் அன்னையும் கூட ஒரு தேவதாசி தான்.

இந்த நடவடிக்கை ஒரு கலையை ஒழிப்பதற்கு சமமானது என்றும், மனித உரிமை மீறல் என்றும் அப்போதே பல தேவதாசிகள் எதிர்ப்பு  கடிதங்களை எழுதினர்.

இது, கலையை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரத்திற்கான உரிமையைப் பறிக்கும் செயல். இருப்பினும் அரசாங்கம் ஒட்டுமொத்த சமூகத்தையும் குறிவைத்தது. தேவதாசி கலையை பழகும் மக்கள் ஒழுக்க ரீதியாக வீழ்ச்சியடைந்த ஒரு பிரிவைப் போலவே நடத்தப்பட்டனர். இன்று வரை நடத்தப்படுகின்றனர். அனைத்து நடன சபாக்களிலும் எங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இறுதியில் இந்த கலை உயர் சாதி இந்துக்களுக்காக திறக்கப்பட்டது,”என்று நிருத்யா பிள்ளை கூறுகிறார்.

தேவதாசி முறையில் உள்ள பெண்கள் அடக்குமுறை பற்றிய வாதங்களை அவ்வப்போது எதிர்கொள்ளும் நிருத்யா, "எந்த அமைப்பில் இது இல்லை என்று சொல்லுங்கள்? சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி பாலியல் துஷ்பிரயோகம் இல்லையா? அங்கு பெண்கள் அடக்குமுறை இல்லையா? என்ற கேள்வியை தன் மனதிற்குள் கேட்டுக் கொள்கிறார் .

கடந்த ஆண்டு, ஒரு நாட்டிய கலா மாநாட்டில், பரதநாட்டியக் கலையில் உள்ள சாதி, பாலினம், சமூக அந்தஸ்து குறித்த இவரின் பேச்சு பலரின் கோபத்தை ஈர்த்தது. அவரின் தாத்தாவிடம் நடனத்தைக் கற்றவர்கள் கூட (மறைந்த சுவாமிமலை ராஜரத்னம் பிள்ளை) நிருத்யா பிள்ளையை வெறுக்க ஆரம்பித்தனர்.  "கோபம், விஷம் மற்றும் கசப்பான நபர்" என்ற அடையாளம் கட்டமைக்கபப்ட்டது. மேலும் முக்கிய சபாக்களும் இவரின் நடனத்தை தடைசெய்தது.

இருப்பினும், நிருத்யா பிள்ளையின் தொடர்ச்சியான போராட்டம் தான் அந்த சமூகத்தில் உள்ள பல நடனக் கலைஞர்களுக்கு பலத்தை அளித்துள்ளது. சென்னையில் உள்ள பரதநாட்டிய நடனக் கலைஞர்களில் ஒருவர்,'பிராமண ஆதிக்கம் கொண்ட நடனக் கலைஞர்களால் ஒத்துக்கபடுவோம் என்ற அச்சத்தால், தேவதாசி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சொல்வதே கிட்டத்தட்ட ஒரு அவமானமாக இருந்தது" என்று கூறுகிறார்.

நிருத்யா பிள்ளையின் நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் பின்பற்றும் கோயம்புத்தூரின் மற்றொரு நடனக் கலைஞர் , “அவர்கள் அதை விபச்சாரம் என்று முத்திரை குத்தினார்கள். இது அவர்களின் பிரச்சினை, எங்களிடம் குறை இல்லை,  நாங்கள் தவறாக இல்லை,” என்று கூறுகிறார்.

தேவதாசி ஒழிப்பு முறை இசை வெள்ளாளர் சமூகத்திற்கு எதிரான கலாச்சார வன்முறை என்று நிருத்யா பிள்ளை வாதிடுகிறார். பெண்களுக்கு சட்டப்படி அனுமதி மறுக்கப்பட்டாலும், ஆனால் அதே சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் பாரதநாட்டிய ஆசிரியர்களாக மாற்றப்பாட்டார்கள்.

அவர் தனது சொந்த தாத்தாவை ஒரு மென்மையான கலைஞராக நினைவு கூர்ந்தார்.  சமூக கட்டமைபினால் அவர் தனக்கான மரியாதை ஒருபோதும் பெறவில்லை என்றும் வேதனையடைந்தார்.

நிருத்யா பிள்ளை தனது சமூகத்தில் உள்ள பெண்களைப் பற்றியும், அவர்களின் வரலாறு பற்றியும் பெருமையுடன் பேசுகிறார். மேலும், தனது ஒவ்வொரு வாழ்க்கை பகுதியையும் தனது சமூகத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கிறார். " இந்த சமூகம் தேவதாசி பரம்பரையில் பெருமை கொள்ள என்னை ஊக்குவிக்காவிட்டாலும், அதைச் செய்ய எனக்கு இன்னும் ஒரு உள்ளுணர்வு உள்ளது," என்கிறார்.

முத்துலட்சுமி ரெட்டி போன்ற சமூக சீர்திருத்தவாதிகளுக்கு, இசை வெள்ளாளர் சமூகத்தை பற்றிய ஒரு முழுமையான புரிதல் இல்லை. இசை  வெள்ளாளர் தாய் வழிஉறவு முறைச் சமூகங்கள். அங்கு பெண்கள் பல உரிமைகளை அனுபவித்தனர். "தேவதாசி என்பது ஒரு சக்திவாய்ந்த கட்டமைப்பு, அது பெண்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்தது ... தேவதாசி பெண்களுக்கு நிலம், பணம் மற்றும் அந்தஸ்துகள் கிடைப்பதை உறுதி செய்தது " என்று பிள்ளை கூறுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய மிகவும் பழமைவாத அறநெறி அதை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது என்றார்.

"ஜெய் பீம்” என்ற கோஷத்திற்குப் பிறகு  பெரியரிஸ்ட் அல்லது அம்பேத்கரைட் ஆக மாற்றுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த நிருத்யா பிள்ளை, "இல்லை," என்று திட்டவட்டமாக  கூறுகிறார்.

1927 ஆம் ஆண்டு  இயற்றப்பட்ட "தேவதாசி ஒழிப்பு முறை" சட்டம் ரெட்டியால் மட்டுமல்ல, பெரியார் போன்ற ஒரு சமூக சீர்திருத்தவாதிகளும் ஆதரித்தனர் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். “பெரியரிஸ்டுகள் மற்றும் அம்பேத்காரியர்கள் கூட பாரதநாட்டியத்தை இப்போது உயர் சாதியினரின் கலை வடிவமாகவே கருதுகின்றனர். நான் ஜெய் பீம் என்று சொன்ன பிறகு, அவர்கள் என்னுடன் பேச ஆரம்பிக்கின்றனர், இந்த கலையின் உண்மை தன்மைகளை உணர முயல்கின்றனர் , ”என்று பிள்ளை கூறுகிறார்.

இசைவெள்ளாளர் சமூகம் வலது சிந்தனையாளர்களாலும், இடது  சிந்தனையாளர்களாலும் பின்னுக்கு தள்ளப்பட்டது. அனைவரும்  ஒழுக்கநெறியை என்பது பிராமணிய சிந்தனையோடு பார்க்கின்றனர். பெண் பாலியலை பற்றிய புரிதல் இங்கு யாருக்கும் இல்லை.

"தேவதாசி அமைப்பு தடை செய்யபப்ட்டு நீண்ட காலமாகிவிட்டது, ஆனால் நாங்கள் அதன் எச்சங்கள். இருப்பினும், "என்னைப் போன்ற ஒருவர் அந்த பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்று சொல்வது, நீங்கள் எரித்த பேய்ளின் மகள்கள் என்று நாங்கள் சொல்வதைப் போன்றது" என்றார்

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment