தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்.எஸ்.ஏ) அஜித் தோவல், வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு ஒரு சைலண்ட் விசிட் அடித்து, ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டு சென்றுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்.எஸ்.ஏ) அஜித் தோவல், வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு வருகை தந்து, சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டு சென்றது தெரிய வந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், இடது தீவிரவாதம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதையடுத்து, என்.எஸ்.ஏ. ஆலோசகர் அஜித் தோவல் வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு அமைதியாக வருகை தந்தார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் மறுநாள் காலை சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
என்.எஸ்.ஏ ஆலோசகர் அஜித் தோவல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார். மறுநாள் காலை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) அமைந்துள்ள கல்பாக்கத்திற்குச் சென்றார். அன்றைய தினமே, சென்னைக்கு திரும்பிய அஜித் தோவல் சனிக்கிழமை மாலை விமானம் மூலம் மும்பை சென்றார் என்று பல்வேறு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு புதுடெல்லி சென்ற ஆளுநர், திங்கள்கிழமை மதியம் சென்னை திரும்பினார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீதான சலசலப்புக்கு மத்தியில் ரவியின் டெல்லி பயணம் வந்துள்ளது. தனது செயலற்ற தன்மை மற்றும் தாமதத்திற்கு எதிராக மாநில அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் நிலையில் ஆளுநர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“