scorecardresearch

சாவர்க்கர் வீரர் என்றால் நேதாஜி, பகத்சிங், சுக்தேவ் யார்? சீமான் கேள்வி

ராகுல் காந்தி சிவப்பாக இருப்பதால் அவரை சின்ன பையன் என நினைத்து மிரட்டுகின்றனர். என்னைய மிரட்ட சொல்லுங்கள் பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

NTK Leader Seeman accused Veera savarker was a subservent of whites
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள், “சாவர்க்கர் வெள்ளையர்களிடம் விசுவாசமாக இருந்தார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அதற்கு மிரட்டல்கள் வருகிறதே? என கேள்வியெழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த சீமான், “ராகுல் காந்தியை மிரட்டுகிறார்கள்.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், என்னை மிரட்ட சொல்லுங்கள் பார்ப்போம். ராகுல் வெள்ளையாக இருப்பதால் அவரை சின்ன பையன் என நினைத்து மிரட்டுகின்றனர்.
வீர சாவர்க்கர் என்றால் வீரனாகிவிடுவாரா? அவர் வெள்ளையர்களிடம் ஓய்வூதியம் வாங்கி சாப்பிட்டவர். வெள்ளையர்களிடம் கெஞ்சி வாழ்ந்துவந்தவர்” என்றார்.
மேலும் வீரசாவர்க்கர் வீரன் என்றால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நேதாஜி, சுக்தேவ், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், அழகு முத்து கோன் இவர்கள் எல்லாம் யார்?

நாங்கள் ஒழிந்து வாழவில்லை. உண்மையிலேயே சுதந்திரத்திற்காக போராடினோம்” என்றார். தொடர்ந்து பாஜகவில் ரவுடிகள் இணைகிறார்கள் என்ற குற்றஞ்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், “ரவுடிகள் இருந்தால் கள்ள வாக்கு போடலாம்” என்று நினைத்திருப்பார்கள்.
அவர்கள் கலவரம் செய்வார்கள், பொதுவாக கலவரம் செய்பவர்கள்தான் அந்தக் கட்சியில் இணைவார்கள். என்னிடமும் ஒரு தம்பி, கட்சியில் இணைய கேட்டார். பின்னர் அவர் பாஜகவில் இணைந்துவிட்டேன் என்று சொன்னார்.

நான் அவரிடம் கேட்டதற்கு அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்ததாக கூறினார்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ntk leader seeman accused veera savarker was a subservent of whites