/indian-express-tamil/media/media_files/2025/09/11/seeman-2025-09-11-16-24-48.jpg)
விஜய் வேடிக்கை காட்ட வரும் சிங்கம் - பரமக்குடியில் சீமான் பேட்டி
2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 13-ஆம் தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கவுள்ளார். விஜய் மட்டுமல்லாமல் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நான் பாமகவில் இருந்தவன். இது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. இது ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனைதான். இருவரும் சேர்ந்து பேசி இந்தப் பிரச்சனையைச் சரிசெய்து கொள்வார்கள்" என்றார்.
தொடர்ந்து திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த சீமான், “பள்ளிக் குழந்தைகளை பசியோடு பள்ளிக்கு வர வைத்ததுதான் திமுக அரசின் சாதனை. இலவசங்களை கொடுத்து மக்களைக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களைத் தலை நிமிர வைப்பேன் என்று கூறுவது சாதனை அல்ல, வேதனை" என்றார்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் சுற்றுப் பயணம் குறித்து விமர்சித்த சீமான், “மக்கள் சந்திப்பு என்பது மக்களிடம் நேரடியாக சென்று அவர்களுக்காக நிற்பதுதான் உண்மையான மக்கள் சந்திப்பு.
ரோடு ஷோ, கூட்டு ஷோ என கை காட்டி செல்வது மக்கள் சந்திப்பு கிடையாது. விஜய் அவ்வாறு மக்களைச் சந்திக்கவில்லை. ஒரு நட்சத்திரப் பிரபலம் என்றால் வாக்குகள் மட்டும் கேட்க வருவீர்களா? இது வேட்டையாட
வரும் சிங்கம் இல்லை வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று சரமாரியாக சாடி வருகிறார்.
சமீபகாலமாகவே சீமான், தவெக தலைவர் விஜயை தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். விஜய்யின் முதல் மாநாட்டில் இருந்து தற்போது நடைபெற்ற மாநாடு வரை அவர் செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து வருகின்றார்.
#JUSTIN விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம் - விஜயின் பரப்புரை குறித்த கேள்விக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி#Seeman#NTK#Vijay#TVK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJpic.twitter.com/rh1Ll6bN38
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 11, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.