Seeman | Aiadmk | Vikravandi | விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்து விட்டது. தி.மு.க அதன் ஒட்டுமொத்த அதிகாரப் பலத்தை பிரயோகிக்கும் என்பதால் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அதிமுக அறிவித்துவிட்டது. இந்தத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி முடிவடைந்துவிட்டது.
வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 26ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தேர்தலில் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து பா.ம.க வேட்பாளரை நிறுத்தியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியும் களம் காண்கிறது. ஆக தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடாத அ.தி.மு.க தங்களை ஆதரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நம்முடைய பொது எதிரி தி.மு.க., தி.மு.க. என்னும் நச்சு மரத்தை வீழ்த்த எளி பிள்ளைகளான எங்களை ஆதரித்து நில்லுங்கள். அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. ஆகவே அ.தி.மு.க. எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார். இதனால் அ.தி.மு.க நாம் தமிழர் கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“