ரஜினி, அஜித், நயன்தாரா வந்தால் விஜய்க்கு வருவதை விட 2 மடங்கு கூட்டம் வரும் – சீமான்

திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும். ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட அதிக கூட்டம் வரும் – கோவையில் சீமான் பேட்டி

திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும். ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட அதிக கூட்டம் வரும் – கோவையில் சீமான் பேட்டி

author-image
WebDesk
New Update
seeman kovai tvk

நடிகை நயன்தாரா வந்தால் இதை விட இரண்டு மடங்கு கூட்டம் வரும் எனவும் விஜய் பரப்புரையில் வந்த கூட்டத்தை பார்க்காதீர்கள், அவர் முன் வைக்கும் கொள்கையை பாருங்கள் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

Advertisment

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சீமான், ””இளையராஜா அப்பாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான். விளையாட்டுத் துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது இசைத்துறையில் இளையராஜாவை விட சாதனையாளர்கள் இதுவரை இல்லை. அதே சமயம் தனிப்பட்ட முறையில் வருத்தம் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்த மரியாதையை வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோருக்கு தரவில்லை. சச்சின் டெண்டுல்கரை விட பாரதியாரும் வ.உ.சிதம்பரனாரும் இழிவாகப் போய்விட்டார்களா? 

இளையராஜாவை இசை அமைப்பாளராக பார்ப்பதை விட நாங்கள் அவரை இசை இறைவனாக தான் பார்க்கிறோம். அவரது பெயரில் விருது வழங்குவது எனக்கு பெருமை தான். முதலில் அவருக்கு நான் தான் பாராட்டு விழா எடுப்பதாக இருந்தேன். இது குறித்து அவரிடமும் கேட்டேன். அரசு அதனை செய்யும் பொழுது இடையூறு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன். தமிழக அரசு பாரதிராஜா போன்ற திரை கலைஞர்களையும் கௌரவப்படுத்தி இருக்க வேண்டும்,” என்று கூறினார்.

திருச்சியில் விஜயின் பிரச்சாரத்திற்கு வந்த கூட்டம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த சீமான், திரையில் பார்த்தவர்கள் தற்பொழுது வரும்பொழுது கூட்டம் வரத்தான் செய்யும். நாங்களும் சிறு வயதில் எம்.ஜி.ஆர் போன்றவர்களை காண்பதற்கு மணிக்கணக்கில் காத்துக் கிடந்தோம். பிறகு அவர் வராமல் நாங்கள் ஏமாந்தும் போனோம். என் சகோதரர் அஜித், ரஜினி, நயன்தாரா ஆகியோர் வந்தாலும் கூடத் தான் கூட்டம் வரும். கூட்டத்தைப் பார்க்காதீர்கள் கொள்கைகளை பாருங்கள். மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்றும் அதில் ஏதாவது சந்தேகம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். 

Advertisment
Advertisements

மேலும் அடுத்தபடியாக மலைகளுக்காக போராட்டம் நடத்தப் போவதாகவும் சீமான் கூறினார். நான் பேசுவது போதிப்பது எல்லாம் இப்பொழுது புரியாது. பாதிக்கும்போது தான் புரியும். இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் வந்த இயற்கை சீற்றங்கள் உங்களுக்கு வராது என்பதை உறுதியாக கூற முடியுமா? நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வீட்டை கட்ட பார்க்கிறீர்கள். நான் என் குழந்தைகளுக்கு நாட்டை வாழ்வதற்காக விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் காசை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் நான் சுவாசத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கனிம வள கொள்ளையை தடுப்பதற்கு ஒரே வழி என்னை அதிகாரத்தில் அமர வைப்பது தான். மேலும் இது போன்ற கேள்வியை என்னிடம் கேட்பதைவிட நேற்று குற்றம் கூடிய அவரிடம் (விஜய்) கேளுங்கள். மலைகள் என்பது என் தாயின் மார்பு போன்று பூமித்தாயின் மார்பு. குவாரி ஓனர்கள் எல்லாம் என்னிடம் ஒரு நாள் சிக்கி பாடுபடுவார்கள் என்று சீமான் தெரிவித்தார்.

பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு பற்றிய கேள்விக்கு, பெற்றோர்களை குடிக்க வைத்துக் கொன்றதால்தான் பெற்றோர்கள் இல்லாமல் போனார்கள் என்று சீமான் பதில் அளித்தார். 

டெட் தேர்வு குறித்தான கேள்விக்கு டெட் தேர்வுக்கு ஒரு டெட் (Dead) போட வேண்டும், படித்து தேர்வுகள் எழுதி ஆசிரியராக வந்து பணிபுரிபவர்களை மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுகிறார்கள். தேர்வு எழுதக் கூறுபவர் எந்த தேர்வு எழுதினார்? செய்தித்தாளை படிக்காதவர்கள் தான் இன்று தினமும் செய்தி ஆகி கொண்டிருக்கிறார்கள் என்று சீமான் கூறினார்.

அப்போது படிக்காத அரசியல்வாதிகளும் இருக்கிறார்களே என்ற கேள்விக்கு, அதற்கு என்ன செய்யலாம் என சீமான் கேள்வி எழுப்பினார். அவர்களுக்கும் தேர்வு வைக்கலாமே என்று செய்தியாளர்கள் கூறியதற்கு சிரித்துக் கொண்டே அப்படி செய்தால் இந்த நாட்டில் யாரும் பிரதமராகவும் முதல்வராகவும் இருக்க மாட்டார்கள் என்று சீமான் தெரிவித்தார்.

கர்நாடகாவில் தி.மு.க.,வின் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. கர்நாடகாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் பொழுது உங்களால் முடியாதா? கர்நாடகாவில் ராமசாமி பிறக்கவும் இல்லை. சமூக நீதியும் பேசவில்லை. முற்போக்கு பகுத்தறிவு என்று எதையும் பேசாத அவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கும் பொழுது உங்களால் எடுக்க முடியாதா? அவ்வாறு எடுத்தால் நீங்கள் ஏமாற்றியது தெரியும் என சீமான் தெரிவித்தார். 

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது குறித்தான கேள்விக்கு, அப்படியெல்லாம் எதுவும் கூறவில்லை. நீங்களாக எதையும் பேச வேண்டாம் நீதிமன்றம் அவ்வாறு கூறியதா? அந்தத் தீர்ப்பை காண்பிக்க வேண்டும் என சீமான் தெரிவித்தார். 

மேலும் வரிகள் விதிப்பது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எல்லாம் தனி சுமை தான். தேர்வு எழுதுவதும் தேர்வால் தகுதி வந்துவிடும் என்று எவ்வாறு கூறுகிறீர்கள். நீட் தேர்வுகள் வட மாநிலங்களில் எவ்வாறு நடக்கிறது. புத்தகங்களை விரித்து வைத்து தேர்வு எழுதுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அது போலியான மருத்துவ மாணவர்களை உருவாக்குமா? தகுதியான மருத்துவ மாணவர்களை உருவாக்குமா? நம் நாட்டில் மட்டும் தான் இந்த சுமை இருக்கிறது. விரும்பிய கல்வியை கற்க முடியாது, கற்றதற்கான வேலையை வாங்க முடியாது, இதெல்லாம் மிகவும் கொடுமை. இதை சர்வாதிகார ஆட்சி என்று சொல்ல முடியாது, கொடுங்கோன்மை என்று தான் குறிப்பிட முடியும்.

அணு உலை, வரி விதிப்பு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு தனியார்மயமாக்கல், ஓய்வூதியத்திற்காக போராடுவது, காவேரி நதிநீர் பங்கீடு, இந்தி திணிப்பு, கல்வி உரிமை, கச்சத்தீவை பறி கொடுத்தது, முதியோர் கொலையை சகித்துக் கொண்டது என இத்தனை துயரங்களையும் தந்தது காங்கிரசு, பா.ஜ.க அரசுகள் தான். காங்கிரஸ் நீட், ஜி.எஸ்.டி என்று பெத்துபெயர் வைத்தார்கள், அதனை உணவு கொடுத்து வளர்ப்பவர்கள் பா.ஜ.க. இதனை எல்லாம் கைதட்டி வரவேற்றது தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும். சாராயக் கடையை மூடுவேன் என்று அங்குள்ள கட்சிகளால் சொல்ல முடியுமா? 

என்னை யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என்று கட்சியின் தொண்டர்களும் பொதுமக்களும் கூறுகிறார்கள். மூன்றாவது உலகப்போரை நிகழ்த்தியவர் பிரபாகரன். இனி ஏதேனும் நடந்தால் அது நான்காவது உலகப் போர் தான். நான் கூட்டணி வைக்காமல் தோற்றுப் போனதில் ஏதேனும் நஷ்டம் உள்ளதா? என்னை விட அதிகாரத்தில் வலிமையாக இருக்க கூடியவரை கூற முடியுமா? நான் போராடி தான் எட்டு வழி சாலை, டங்ஸ்டன் தொழிற்சாலை, பேனா ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சீமான் கூறினார்.

அதிகாரத்தில் எப்பொழுது சீமான் வருவார் என்ற கேள்விக்கு, ஓட்டு போட்டால் அதிகாரத்திற்கு வருவேன், கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் எப்படி வருவேன் என பதில் அளித்தார். அதிகாரத்திற்கு வந்தவர்கள் எல்லாம் தீமை செய்தார்கள், நான் நன்மையை செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என தெரிவித்தார். 

பிரதமர் மணிப்பூர் சென்றது குறித்தான கேள்விக்கு, அவர் போக வேண்டும் என்று நினைத்திருப்பார். அதனால் போய் இருப்பார். அங்கு கலவரம் பத்தி எரியும் பொழுது போகாமல் தற்பொழுது, அங்கு எந்த பிரச்சனையும் இல்லை, அப்பொழுது செல்கிறார் என விமர்சித்தார். மேலும் பிரதமரை அருணாச்சல பிரதேசத்திற்கு சென்று ஓட்டு கேட்டு வர முடியுமா என்றும் கேள்வி எழுப்பிய சீமான், சீனாக்காரர்கள் அதனை அவர்களது மாநிலம் எனக் கூறுகிறார்கள் என்றார். 

பாகிஸ்தான் உடன் உடனே போரெல்லாம் அறிவிக்கிறீர்கள். ஆப்ரேஷன் சிந்துரெல்லாம் போடும்பொழுது ஆபரேஷன் இந்தூர் என்ற ஒன்றை இலங்கை விவகாரத்தில் செயல்படுத்தலாமே என சீமான் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் விமான நிலையம், பேருந்து நிலையங்கள் எல்லாம் இருக்கும். ஆனால் உணவிற்கு எதுவும் இருக்காது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. விமான நிலையம் கட்டி விட்ட பிறகு பசி எடுத்தால் விவசாயம் செய்ய விமான நிலையத்தை இடிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். 

2026 இல் என் கையில்தான் ஆட்டம் இருக்கும். இங்க இருக்கக்கூடியவர்கள் மக்களின் இதயத்தில் இருந்து மக்களின் பிரச்சினையை பேச மாட்டார்கள். இங்க இருக்க கூடிய அரசியல்வாதிகள் பேப்பரில் எழுதி வைத்து படிக்கிறார்கள் என ஸ்டாலின் விஜய் ஆகியோரை பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியும் பேப்பரில் எழுதி வைத்து தான் படித்து வருகிறார். இவர்கள் பெரிய தாளை வைத்து படிக்கிறார்கள் ஸ்டாலின் சிறிய பேப்பரை வைத்து படுக்கிறார். மழை வந்தால் பேப்பரை வைத்து படிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். 

மேலும் விஜய்யை இவ்வாறு நிக்க வைத்து எத்தனை மணி நேரம் கேள்வி கேட்க முடியும் என்று கேள்வி எழுப்பிய சீமான் செய்தியாளர் சந்திப்பிற்கு வரவில்லை என்று கூறுகிறார், அப்படி என்றால் நேரடியாக கோட்டைக்கு வருகிறேன் என்று மட்டும் கூறுகிறாரா என சீமான் கேட்டார். 

விஜய்க்கு கூடிய கூட்டம் ஒட்டாத மாறுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருவது குறித்தான கருத்திற்கு, விஜய் கூறுவதைப் போலவே ஐ யம் வெயிட்டிங் (I am Waiting) என பதில் அளித்தார். எதுவாக இருந்தாலும் மே மாதம் தெரிந்து விடும் அதுவரை பொறுத்திருப்போம் சீமான் என தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை 

Seeman kovai Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: