ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு… நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

பாலசுப்பிரமணியனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச மக்களைத் தவறான பாதையில் செல்லத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என புகாரிளிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியது.இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் இந்திய விமானப் படை கேட்டுக்கொண்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், 1975-ல் ரஷ்யாவிலயிருந்து வாங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட விமானம், மிகவும் பாதுகாப்பான விமானம் எப்படி விபத்துக்குள்ளானது? இதில் பெரிய சதித்திட்டமே இருக்க வாய்ப்பிருக்கிறது. இதில், பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சருக்கும் தொடர்பு இருப்பதுபோல் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டைப் பிறமொழி தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் என்பவர் இது பற்றி கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், “பாலசுப்பிரமணியனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச மக்களைத் தவறான பாதையில் செல்லத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி கீரனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியனைக் கைதுசெய்தனர்.

முன்னதாக, விபத்து குறித்து தவறான கருத்தை பரப்பியதாக தமிழ்நாட்டில் யூடியூபர் மாரிதாஸ் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ntk man held for spreading malicious video on chopper crash

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express