சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஆதித் தமிழர் பேரவையினர் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளர் அறிவிக்கும்போது, ஆதித்தமிழர் கட்சியைப் பற்றி அவதூறாக பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் சீமானிற்கு எதிராக கண்டனங்கள் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், இன்று ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்தோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சீமானின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை போரூர் காவல்துறையினர் தடுத்து சாலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சியினர், திடீரென்று தலைமை அலுவலகத்தை நோக்கி கற்களை கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.
இதற்கு, நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் காத்திருந்தவர்களுக்கு தனது ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சரமாரியாக தாக்க முற்பட்டனர்.
இதனால் இந்த பகுதி முழுவதும் கலவரம் போல் காட்சியளித்து வந்தது. தொடர் தாக்குதலில் இரு தரப்பினரும் ஈடுபட்டதால் சுமார் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil