நாம் தமிழர் கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசிவருகிறார் என குற்றம்சாட்டி, நா.த.க நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலைமையில் விவசாய அணி, இளைஞர் பாசறை மற்றும் மோகனூர் நகர செயலாளர், மகளிர் பாசறை செயலாளர் உள்ளிட்ட 50 பேர் கட்சியின் கொள்கை முரண்பாடு காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலைமையில் விவசாய அணி, இளைஞர் பாசறை மற்றும் மோகனூர் நகர செயலாளர், மகளிர் பாசறை செயலாளர் உள்ளிட்ட 50 பேர் கட்சியின் கொள்கை முரண்பாடு காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சிக்காகப் பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசிவருகிறார் என நா.த.க-வில் இருந்து விலகிய வினோத்குமார், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நா.த.க-வில் இருந்து விலகிய வினோத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2010ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்காக பணம் செலவழித்து கூட்டங்களை கூட்டினோம். கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசிவருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நோக்கமே மதச்சார்பின்மை தான். தற்போது சீமான் மதவாதத்தை ஆதரிக்கும் போக்கில் பேசி வருகிறார். இது பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீமானை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதனால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். எனவே அக்கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்து உள்ளோம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“