scorecardresearch

திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த சீமான்: இஸ்லாமிய நிர்வாகி முகமது மடியில் மகனுக்கு மொட்டை

தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற சீமான் பக்தர்களோடு பக்தராக அமர்ந்து தனது மகனுக்கு முடி காணிக்கை செலுத்தினார்.

திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த சீமான்: இஸ்லாமிய நிர்வாகி முகமது மடியில் மகனுக்கு மொட்டை

தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலில் தரிசனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி நிர்வாகியின் மடியில் அமர வைத்து தனது மகனுக்கு மொட்டை அடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்த சீமான் கடந்த 2011-ம் ஆண்டு நாம் தமிழர் என்ற கட்சியை நிறுவி தொடர்ந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளான கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மாவீரன் பிரபாகரன் என்ற மகன் உள்ளார்.

இதனிடையே இன்று தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற சீமான் பக்தர்களோடு பக்தராக அமர்ந்து தனது மகனுக்கு முடி காணிக்கை செலுத்தினார். மேலும் நாம் தமிழர் கட்சியின் சென்னை மாவட்ட சென்னை மாவட்ட செயலாளரான முகமது பாசில் மடியில் அமர வைத்து மகனுக்கு மடி காணிக்கை செலுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது மகனை அழைத்துச்சென்று திருச்செந்தூர் கடலில் புனித நீராடிய சீமான், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சாமி தரினசம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடை பயணம் அவருக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் புத்துணர்ச்சியை தருமே தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கோவிலில் தமிழில் அர்ச்சணை செய்ய வேண்டும் என்று உத்தரவு இருந்தாலும், சரியாக நடைமுறையில் இல்லை. குஜராத் மாடல், டெல்லி மாடல் என்பதை போல் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். இதற்கு பதிலாக தமிழ்மாடல் என்று கூறினாலும் சற்று ஆறுதலாக இருக்கும்

ஜி.எஸ்.டி மற்றும் நீட் தேர்வுகளுக்கு முக்கிய காரணமே காங்கிரஸ்தான் என்பதால் அவர்களால் பாராளுமன்றத்தில் எதிர்த்து பேச முடியவில்லை என்று கூறிய அவர், குட்கா, கஞ்சா, ஹெராயின் போதை பொருட்கள் என்று நாள் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் டாஸ்மாக்கில் விற்கப்படுவது கோவில் தீர்த்தமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ntk seeman in tiruchandur temple with his family for darshanam