Advertisment

மெரினாவில் பேனா வைத்தால் உடைப்பேன்: கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. நினைவுச் சின்னம் அமைத்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்பேன். தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் – சீமான்

author-image
WebDesk
New Update
மெரினாவில் பேனா வைத்தால் உடைப்பேன்: கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

பேனா நினைவுச் சின்னம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் கலந்துக் கொண்டார். (படம் – சீமான் ட்விட்டர்)

மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் உடைப்பேன் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கூறினார்.

Advertisment

முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் திருச்சி பத்திரிகையாளர்கள் குடும்பங்களின் பரிதாபநிலை!

மேலும், நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரம்மாண்ட பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து, மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தங்களது தரப்பு கருத்தை முன்வைக்க பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் கலந்துக் கொண்டன. நாம் தமிழர் கட்சியின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துக்கள் எழுப்பப்பட்டது.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்களுக்கு மத்தியில் பேசிய சீமான், பேனா நினைவு சின்னம் வைக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. கடலுக்குள் வைக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். வேறு எங்கு வேண்டுமானலும் வையுங்கள். கடலுக்குள் வைத்தால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வரும். பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சுழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன். உங்கள் கூச்சலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.

மாற்று கருத்து கூறினாலே கூச்சலிடுவது அநாகரீகம். கடலில் புதைக்கவிட்டதே தவறு. மெரினாவில் கடலில் பேனா நினைவு சின்னத்தை வைத்தால் உடைப்பேன் என்று ஆவேசமாக பேசினார்.

மேலும், பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. நினைவுச் சின்னம் அமைத்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் என்றும் பேசினார்.

இதையடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து தன்னுடைய கருத்துக்கள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் சீமான் கொடுத்தார். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீமான் அழைத்து செல்லப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment